விழுதாய் நாமும் மாறிடுவோம்
கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம்
நூற்றி ஐம்பது
அகவையிலே
நுழையும் கனடா தேசத்தைப்
போற்றிப் பணிந்து வணங்கிடுவோம்!
பொலிவுற வேண்டி வாழ்த்திடுவோம்
சொந்த மண்ணில் அடிபட்டுத்
தூர தேசம் கதியென்று
வந்த பல்லின மக்களையும்
வரவேற் றுதவிய திக்கனடா!
நிலவளம் நிறைந்த கனடாவை!
நீர்வளம் மலிந்த கனடாவை!
உலகிற் சிறந்த நாடாக
உயர்த்தக் கூடி உழைத்திடுவோம்!!
பல்லினம் கூடிக் கைகோர்த்துப்
பண்பாய்ப் பழகும் கனடாவில்
நல்லிணக் கத்தை வெளிப்படுத்தி
நாளும் சேர்ந்து பழகிடுவோம்!
ஒருவரை ஒருவர் மதித்திடுவோம்!
ஒற்றமை யாக இருந்திடுவோம்!!
பெருவளம் கொண்ட கனடாவின்
பெயரது விளங்கப் பணிசெய்வோம்!
ஒளிந்து கிடக்கும் திறமைகளை
ஒன்றாய்த் திரட்டி மூச்சோடு
வெளியே கொணர்ந்து கனடாவின்
விழுதாய் நாமும் மாறிடுவோம்!!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்