வருங்காலத் தூண்கள்
மணிமாலா மதியழகன்
புள்ளிமான்களைப்போல
துள்ளித்திரிந்து
கள்ளங்கபடின்றி கலகலப்பாய்
வலம் வரவேண்டிய பருவத்தில்
கட்டுக்கட்டாய்ப் புத்தகங்களை
நித்தமும் சுமந்து
நிம்மதியற்றுப்போனதுடன் நில்லாமல்
பல கலைகளையும்
கற்றுத்தேற வேண்டுமென்ற
பெற்றோரின் கட்டாயத்தாலும்
மதிப்பெண் எனும்
மாபெரும் சக்திக்காகவும்– இன்று
சக்கையாய்ப் பிழியப்படும்
சந்ததிகள் நம்
நாளைய தலைவர்கள்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்