கர்மவீரர் காமராஜர்

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்



ர்மவீர ரென்கவுங் காமராஜ ரென்கவுங்
       காலமொன்று கூறவுங் கனிந்ததுவே இந்தியா
தர்மதேவ னையனாய் தாங்கிநின்ற மெய்யனாய்
       தமிழநாடு தோழனாய்த் தந்ததுவே நித்தியம்
கர்வமிலாத் தேவனாய் கதருடையின் சீலனாய்க்
       கனிமுதல்வர் என்கவே கண்டதுவாம் தமிழ்நிலம்
பர்வதத்தின் ஆட்சியாய் படிக்காத மேதையாய்
       பாடசாலை யாயிரம் பட்டிதொட்டி யாக்கினன்!

நற்காலம் என்கவும் பொற்காலம் என்கவும்
       நவமான ஆண்டுகள் நன்காற்றி வைத்தவர்
கற்பதற்கு வாய்ப்பிடுங் கல்விக்கண் திறந்துமே
       கனபள்ளி நாள்தொறுங் கனிந்துணவு வழங்கினார்
அற்புதமாய்ப் பிரதமர் ஆக்கிடும்வன் மையராய்
       அகிலத்து இந்தியா அத்தனைக்குங் தலைவராய்
சொற்பதத்தில் வைத்துமே சிறந்துநின்ற சிந்தையார்
        சிந்தியத்தில் விற்பனர் தேயமென்ற மைந்தனாம்!

ஆயிரத்தி மூன்றென ஆண்டெனும் யூலையில்
      ஆகுபதி னைந்தொடும் ஆனவிரு துநகரில்
வாயமகன் தோன்றிட மன்றாகி வந்தவர்
      வளர்நாட்டுக் காந்தியும் மகிமையென உப்புபோர்
ஏயமுடன் நின்றுமே இந்தியத்து விடியலுமாய்
      எழில்வாழ்வைப் போக்கிய தென்னாட்டுக் காந்தியாம்
தாயையுஞ் சிறப்பிடத் தகைசெய்யாத் தலைவனாய்
       தந்தகாம ராசரென் றானதுவாம் சரிதமே!

மறைவுக்குப் பிந்திய பாரதரத் னாவெனும்
       பரிந்துரையாம் பட்டமும் மாண்புமிகு தலைவனார்
நிறைவுக்குப் பின்னரு மின்றுவரை யாட்சியின்
       நிறுத்தலிலே இந்தியம் நிறுத்துவகை யாக்குதே!
கறையிலாத தலைவனும் கதருடையின் புதல்வனும்
       கனிந்தபார தத்தொடுங் கர்மவீர என்கவும்
மறையெழுதி நிற்பதும் மானமென்ற சாவிலும்
       மறையாதி ருப்பனே மானவீரன் காமராஜ்!

 




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்