அழகு
சோ.பொ.கமலப்பிரியா,
அறந்தாங்கி
மலை
அழகுதான்
உயரத்தில் இருக்கும்வரை!
மழை அழகுதான்
வீடு ஒழுகாதவரை!
மலர் அழகுதான்
மணம் வீசும்வரை!
சூரியன் அழகுதான்
சுட்டு எரிக்காதவரை!
இன்பம் அழகுதான்
இளமை இருக்கும்வரை!
துன்பம் அழகுதான்
தாங்கும் துணிவு இருக்கும்வரை!
இயற்கை அழகுதான்
இயல்பு கெடாதவரை!
எல்லாமே அழகுதான்
எல்லைக்குள் இருக்கும்வரை!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்