இன்னும் என்னை என்ன செய்யச்சொல்கிறாய்?

தமிழ்மணவாளன்

ன்னும்என்னதான்செய்யச்சொல்கிறாய்?
நீகேட்கவிரும்பியதையே
நான்பேசினேன்
உன்கண்களுக்குவிருப்பம்ஏதோ
அதையேபார்வையாக்கினேன்
நன்றிகெட்டவன்என்னும்சொல்லுக்குபயந்து
ஒருநாய்க்குட்டியைப்போல
சட்டைப்பையில்போட்டசில்லரைக்காசாய்
சப்தமின்றிக்கிடந்தேன்
வார்த்தைகளில்சொன்னஇலக்குகளுக்கு
அழைத்துப்போவதாய்ச்சொல்லி
முட்டுச்சந்தில்நிறுத்தியபோதெல்லாம்
வெற்றிக்களிப்பெனமுகம்நடித்து
உடன்வந்திருக்கிறேன்
எல்லாவற்றுக்கும்மேலாய்
நேரம்கணித்தவெடிகுண்டைவிழுங்கி
காலப்பொத்தானைகையளித்துநிற்கிறேன்
என்றபோதிலும்
இன்றையபொழுதிற்குஉனக்குத்தேவையான
குற்றவாளிப்பட்டியலில்
ஒருநபர்குறைந்ததற்காகஅவ்விடத்தில்
என்பெயரைஎழுதுகிறாயே
என்ன நியாயம்.
        

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்