இதற்குத்தான்...
கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி
விலை போகாத ஏக்கம் என்ன
விளைவுகளைக் கொடுத்து விடப் போகிறது பெரிதாய் என்று...
நேற்றுவரை இறந்துதான் கிடந்தேன்...
மன ஆழங்களில் மல்லிகை ஒத்தடம்
கொடுத்து உயிர்ப்பித்து விட்டாய்...
சிறகற்ற சின்ன உயிருக்கு...
இடைவெளி கடப்பது எளிதாகிவிட்டது இப்போது
உன் விரல் பிடித்து...
தாய் முகம் பார்த்தே பாலருந்தி
வயிறும் மனமும் நிறையும் பிள்ளையாய் மனம் மகிழ்ந்து
நிறைந்து...
எதுக்களித்து வருகின்றது இன்ப எல்லைகள் இப்போது...
உன் குரல் கேட்ட திசையில் கும்பிட்டு நிற்கிறேன்...
கண்ணேறு கழித்துக்
கட்டிக்கொள்...!!!
கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்