இப்படித்தான் இருந்தேன் அன்றும்...

கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி


அப்போதெல்லாம் உன் வானில்
ஒற்றை நிலவு நான்...
மென் ஒளி ரசித்து கண் சொக்குவாய்.
இதயத்துக்கு மிக அருகே
உன் விருப்பமான நான்...

என் மீது எனக்கு நேசம் பிறந்த நாட்கள் அவை...
விரிவான எல்லைகள் காட்டிய
பிரமிப்பின் வசீகர பிரம்மாண்டத்தில்
வெகுதூரம் வந்துவிட்டேன்
உன் கரம் பற்றி...
அப்போதே எச்சரித்திருக்கலாம்...

நீ வெற்று வானமல்ல பிரபஞ்சம்...
நிறைய நிலவுகளுண்டு ஒளிதர...
மங்கி எரியும் என்மீது மயக்கம்
தங்கியிராதது நிரந்தரமாய் என
புரிகிறது தாமதமாய்...

என்றாலும் தடுத்தாட்கொண்ட அந்த தெய்வீக நாட்களை...
புரட்டிப் பார்த்து பூரிக்கும் எனக்கு...
போதும் அந்தப் புனிதம்...

மீராவும் ஆண்டாளும் அல்ல நான்... இருந்தும்....
அப்டித்தான் இருக்கிறேன் இன்றும்...!!!


கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி

        

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்