தியாகம்...

கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி



சுயத்தின் மீதே சவாரி செய்வதால்
சுற்றி நடப்பது தெரியாத கண்களில் மமதை...
மீண்டும் மீண்டும் முருங்கை மரமேறும்
வேதாளக் கூட்டத்தை
இழுத்து வர இயலாத ஒற்றை விக்கிரமாதித்தனாய் மக்கள்...

வாக்கு வங்கிகள் சலவை நோட்டுகளின்
நிழலில் இளைப்பாற...
சேவைகள் தேவைப்பட்டதில்லை...
கரை வேட்டிகளின் வெண்மையில் காயக்காய படியும் குருதிக் கறைகள்...

படையெடுப்பின்றி நடக்கும் கொள்ளையில்...
பதுங்குகுழிகள் அரண்மனையும் கோட்டையுமாய் உறுமாற்றம்...

உயிர் விட்ட உத்மர்கள் கதை
உப்புச்சப்பு இல்லாத செய்திப் படங்களாய் மட்டும்...

பரிணாம வளர்ச்சியில் கரைந்துவிட்ட
பலவற்றுள்....

பண்டிகையின் பெயரோடு மட்டும் ஒட்டியிருக்கிறது இன்னும்....
தியாகம்...!!!


கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி

        

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்