கொசுத் தொல்லை!

நாச்சியாதீவு பர்வீன்

 

 

தாங்கொண்ணா 
தலைவலிதான் இந்தக் கொசுவால்

கொசு வலைக்குள் 
சிக்காத கோமாளிக் கொசுவது

அழுக்குகளில் பிறந்து 
அழுக்குகளில் வாழ்ந்து 
பிறரை அழுக்காக்க 
துடிக்கும் அழுக்கான வஸ்தது

மலமும்,இரத்தமும் 
அதன் மனத்திற்குப் பிடித்த உணவுகள் 
அத்தோடு அடுத்தவரின் 
மானத்தையும் 
அது உறிஞ்சிக் குடித்து ருசிபார்க்கும்

அடித்து விரட்டினாலும் 
அறைக்குள் வந்து கிணுகிணுக்கும்

காதுகிழிய கத்தும் கொசுவை 
வெறுத்து ஒதுக்கி 
வேண்டாம் என்ற பிறகும் 
வெட்கம் இல்லாமல் 
வேலிக்குள் நுழைகிறது

சாக்கடையில் பிறந்ததனால் 
நாற்றம் பற்றிய கவலை 
அதற்கில்லை 
நாறிநாறி 
இன்னும் நாறுகிறது

கொல்லவேண்டிய கொசுவது 
கொசுவர்த்தி வைத்தாலும் 
சாகாத இந்தக் கொசு

தலைக்கணத்தில் 
அலைந்து திரிவதால்

இன்னும் சில நாட்களில் 
தலைவெடித்து 
தானாக செத்துப்போகும்.





       

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்