கிராமத்து கனவுகள்

நாச்சியாதீவு பர்வீன்



டை நீரில் பாடும் மீனாய்
நாளும் கழித்த நாட்களவை
வாடை காற்றை பிடிக்க நாங்கள்
வயல்வெளி தோறும் சுற்றிய நாட்கள்

ஆடை கட்டிய வார்த்தை கொண்டு
ஆசுகவிகள் நாம் பாட
மேடை கட்டி மேலும் சிலரோ..
எம்மை எதிர்த்து பாடிய நாட்கள்

ஒற்றையடிப் பாதைகள் தோறும்
ஒளிந்து நாமும் விளையாடி
ஒற்றுமையாய் நாம் கழித்த-அந்நாள்
ஒரு நாளும் வாராதோ..

மண்வீட்டு திண்ணையில
மச மசன்னு காத்து வரும்
மல்லாக்கப் படுத்துறங்கும் நாள்
மறுபடியும் எப்ப வரும்

கெண்ட விராலு கெளுத்தி மீனெல்லாம்
கெளயோட புடிச்சி வந்து ....
அண்டாவுல போட்டவிச்சி
அலுக்காம திண்டா நாளெப்பவரும்.

மீளெழும் கிராமத்து கனவுகள்
மிதக்கின்றது இதயத்தில்
யார் அழிக்க முயன்றாலும்
அது ஒருநாளும் முடியாது

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்