கிராமத்துக்கு
வாழ்க்கைப்பட்ட எழுத்தாளன் மேலாண்மைப் பொன்னுச்சாமி
கவிஞர் முருகேசு
மயில்வாகனன்
தோன்றினார்
மேலாண்மை மறைநாடு பொன்னுச்சாமி
சான்றாண்மை மிக்கவராய்ச் சாதித்தார் எழுத்தாலே
ஆன்றமர்ந்து கற்றார் அறிவுசால் நூல்களையே
வானுயர எழுந்துநின்றார் வாழ்னவின் இறுதிவரை.
கற்ற லற்ற காளை பொன்னு
கற்றார் தரமாம் ஐந்தே மட்டும்
வறுமை வாட்டிட வயல்வேலை செய்தே
குறுநூல் கற்றே கூட்டினார் த்ன்னறிவை
உள்ளத் தெழுந்த உணர்வை எழுத்தாய்
எழுதிய கடதாசி என்றோ ஒருநாள்
வழுவின்றி வாழ்வை உயர்த்துமென் றெண்ணினார்
எழுத்து லகிலே தானெரு பாமரன்
தன்னுள் திறமையைத் தானறியாப் பொன்னு
இன்னலுற்ற போதும் இயன்றளவு வாசித்தே
தன்னை உயர்த்தத் தளராது யர்ந்தார்
தன்னெ ழுத்தைச் செம்மலர் பிரசுரிக்க
இன்பமுறத் தொடர்ந்தார் எழுத்துப் பணியினை
கிராமத்து வாழ்வைக் கீர்த்தியறச் செய்ய
தொழிலாள வர்க்கத்தின் தோழ னாக
களிப்பாய்க் கொண்டே கமக்கார வாழ்வைக்
கருப்பொ ருளாய்க் காட்டினார் தன்னெழுத்தில்
வாசிப்பே நல்லாசான் வகைவகை நூல்களைத்
தேடி எடுத்தே தேர்ந்த வற்றைக்
கற்றுத் தேர்ந்தார் கதைக்காம் கருவை
வாடிடாமல் சிறுகதை வாய்ப்பாம் நாவல்
குறுநாவல் என்ற குறிக்கொ ளுடனே
தன்வாழ் விறுதிவரை தன்னார்வம் மிஞ்சிடவே
எழுதி முடித்ததுடன் ஏற்றமுறு பரிசுகளும்
வந்தனவினை முடிந்திட வாழ்வைவிட் டகன்றாரே
சிந்துகின்றோம் கண்ணீர் சிறந்த எழுத்தாளன்
இன்றில்லை என்றே ஏங்குகிறோம் இந்நாளே.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்