காலன் கவர்ந்தானே...!

பெருமாங்குப்பம், சா.சம்பத்து




ற்பனையைத் தவிர்த்து -நின்
கரிசல் மண்ணில்
உண்மைகளைத் தாளில்
ஒற்றி உணர்த்தியவன் நீ...!

கதைக் கற்பனையில்
காவியம் கண்டவர் முன்-நிகழ்
இருப்பின் இழிவுகளை
இலக்கியம் ஆக்கியவன் நீ...!

வாழ்க்கைப் போர்க்களத்தின்
வல்லாளர் கொடுமைகளை
வார்த்தைக் களத்தினிலே
வரிசையாய் அடுக்கியவன் நீ...!

அளவான பேச்சாலே-ஓர்
அளபெடை போல் சிறந்த
நீ
எளிய வாழ்விற்கோ-நல்ல
எடுத்துக்காட்டானாய்...!

எங்களைக் கவர்ந்த உன்னைக் -கொடியக்
காலனும் கவர்ந்தானே...!
 



பெருமாங்குப்பம், சா.சம்பத்து


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்