மௌனம்
கவிஞர் புகாரி
மௌனம்
சிறந்த மொழி
மௌனம்
பேரறிவின் அடையாளம்
மௌனம்
உயிரின் காப்பகம்
மௌனம்
உணர்வுகளின் நங்கூரம்
மௌனம்
மன்னிப்பின் ஆலயம்
மௌனம்
வானத்தின் நீலம்
மௌனம்
கடலின் ஆழம்
மௌனம்
கருந்துளையின் ரகசியம்
ஆனால்
சில
நச்சு மௌனத்தின்பின்
கொடிய ஆபத்து வலைகள்
அவசர அவசரமாய்ப்
பின்னப்பட்டுக்கொண்டிருக்கின்றன
என்பதே
மௌனத்திற்கான
ஒரே ஒரு துயரச் சாபம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்