இதயதெய்வம்!

மாவிலிமைந்தன் சி.சண்முகராஜா,கனடா




பொன்மனத்தைக் கொண்டசெம்மல்
     புரட்சிநாயகன் - தன்
நன்மனத்தினாலேயானான்
     நாட்டின் காவலன்!
தன்னினத்தோர் ஈழ மண்ணிற்
     தவித்தபோதிலே- பெற்ற
அன்னைபோலஅணைத்தெடுத்தான்
     அமைதிகாணவே!
நூறுஆண்டுகாணும் அவனின்
     நினைவுஎம்மிடம் - நல்ல
ஆறுபோலஅவன்சமைத்தான்
     அழகுமாநிலம்!
மாறுகொள்கையாளர் கூட
     மதித்தமன்னவன் - நாள்
தோறும்ஏழைஎளியோர் போற்றித்
     துதித்ததென்னவன்!
வெள்ளித்திரைசென்றுமக்கள்
     திலகமாகினான்–மக்கள்
உள்ளத்திரைபதிந்த மூன்றன்
     உருவமாகினான்
வெள்ளமானமக்கள் முன்னே
     தலைவனாகினான் - மனம்
கள்ளமற்றதால்இதயத்
     தெய்வமாகினான்!



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்