களம்பல கண்ட எம்ஜிஆர்.

முருகேசு மயில்வாகனன்
 


ழமே சொந்தவூர் இதயம் மென்மை
ஆழமாம் அறிவு அனுபவ முதிர்வு
ஏழையாய்ப் பிறந்ததால் ஏற்பா ரில்லை
வாழ நினைத்தார் வறுமையை எதிர்த்தே
துணிவு துரத்தத் தூர தேசம்
துணிவாய்ச் சென்றே துணையை நாடினார்
அன்னையின் பூமி ஆதர வதனால்
சென்றார் சென்னை சேர்ந்தார் கூத்துக்
குழுவில் குறைகள் குன்றாப் பணிகள்
சிறுசிறு பணிகள் சிறுவர்க் கேற்பத்
துணிவுடன் தரவே தூய சிந்தை
அணிசெய ஆர்வம் அவர்க்குத் தானே
நாடக மேடை நற்பயன் தரவே
ஆடல் பாடல் ஆன பயிற்சிகள்
தேடியே தந்தன தேவைகட் கேற்ப
ஆடியே பாடி ஆனந்தங் கண்டார்
அன்னைசொல் மந்திரம் ஆன தவர்க்கு
உன்னத உழைப்பை உயர்வாய்க் கொண்டே
அன்னை கைக்கொடுத்;தே ஆனந்தங் கண்டார்
சிறுமையின் வறுமை செய்தி கூற
வறுமை யுற்ற மக்களை நேசித்தார்
நடிப்புத் திறத்தால் நற்பெயர் பெற்ற
துடிப்புடை இளைஞர் துணைநடிக ரானார்
கதாநா யகனாய்க் கவர்ந்தார் மக்களை
சினிமா மூலம் செய்திகள் சொன்னார்
புகைத்தல் குடித்தல் பொய்புறங் கூறல்
மறவழி செல்வோரை மடக்கிப் பிடிக்கும்
காட்சிகள் காட்டி கவர்ந்தார் மக்களை
களமே அமைத்தார் கட்சி அரசியல்
மக்கள் தொண்டன் மாசறு தலைவன்
ஏழை எழியர்க் கேற்ற நண்பன்
தமிழக நாயகன் தக்க முதல்வன்
ஈழத் தமிழரின் இனிய நண்பன்
ஆழமாய்ச் சிந்தித் தருந்தொண் டாற்றிய
ஊழலற்ற உத்தமன் எம்ஜிஆர்
வாழ்வை முடித்தே வானகம் சென்றாரே.
 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்