நாளைய தமிழன்

கவிஞர் புகாரி
 


 

ணையப்போகும்
சூரியத் திரியில்
நெருப்பேற்றுவான்
தமிழன்

சீற்றமிகு சுனாமிகளின்
சக்தியில் உரமெடுத்து
பச்சைப்பயிர் வளர்க்கும்
அறிவியல் செய்வான்
தமிழன்


தடம்மாறும் நிலத்தட்டுகளின்
தலையில் கொட்டி
பூகம்பத்தை அரைக் கம்பத்தில்
பறக்கவிடுவான்
தமிழன்

 

இவைபோல்
அறிவியல் சாதனைகளில்
மாற்றங்களை வாழ்வின்
ஏற்றங்களாக்கிக் கொண்டாலும்
நாளைய அதிநவீன
மின்னணு வீடுகளிலும்
தன் முலை எடுத்துப்
பாலூட்டும் தாய்
ஓர் தமிழச்சியாய்
மாத்திரமே இருப்பாள்
 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்