சூரியப்பூக்கள் கவிஞர்
கவிஞர் வீணைமைந்தன்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
இன்பத் திரு நாட்டை
பிந்திய பகைவர் பேயினும் கொடியவர்
திருடிய செயல் கண்டு
சிந்திய இரத்தம் பாய்ந்தது மண்ணில்
சீறி எழுந்தனர் சினத்துடன் புலிகள்!
வந்திடும் பகைவனை வாளினைக் கொண்டு
வேருடன் அழித்தனர்!
மந்திரம் சொல்லி மாய்ந்தது போன்று
வஞ்சகப் பேய்களின் வாலினை வெட்டினர்!
சுதந்திரம் என்ன! சுக்கா! மிளகா!
பந்தினைப் போன்று சுழன்றனர் எங்கள் சந்ததி மைந்தர்!
சந்தனம் பூசும் சடங்கு மறந்தனர்
சாதி மல்லிகை வாசம் துறந்தனர்
வெந்தணல் குளித்து மாயந்தனர் அல்ல
சுதந்திரச் சுவாலையின் சூரியப் பூக்களாய் மலர்ந்தனர்
மண்ணில்!
இங்கிவர் விதைத்தது சுதந்திர விதைகள்
பொங்குதே உள்ளம் தம்பிகள் செய்த தியாகம் கண்டு!
மங்குமா எங்கள் மானம் வீரம்
சங்கே முழங்கு! தமிழே முழங்கு!
சிந்திய இரத்தத் துளிகளின் மண்ணை
சிவ சிவ எனவே நெற்றியில் பூச!
கத்தும் கடலின் பேரலையொலியுடன்
செத்தும் வாழும் மாவீரர் தியாகம்!
கவிஞர் வீணைமைந்தன்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்