பால்வினை (HIV) நோய்
முருகேசு மயில்வாகனன்
இல்லறம் நல்லறம்
என்று உணர்ந்தே
இல்லா ளோடு இணைந்து வாழ்ந்தால்
நல்லறம் எந்நாளும் நாடி நிற்கும்
அன்பும் அறனும் அருகரு காமே
துன்பம் இல்லைத் துயரம் இல்லை
நோய்நொடி தானும் நெருங்கா தென்றும்
அல்;ல லில்லா ஆனந்த மாமே
நல்லறம் காக்கும் நாயகி இருக்க
பரத்தையர் நாடும் பாவி மகனே
வரத்தான் இருக்கும் வலிய நோய்கள்
நரபலி எடுப்பதை நன்கறி வாயோ
பலபெண்; சேர்க்கை பற்றிடு கிருமி
கலந்துற வாடக் களிப்புடன் நோயும்
இட்டுத் தொட்டு இடரே தந்திடும்
குருதியில் கிருதி கலந்து உடலெங்கும்
புண்ணும் சிதலும் பூத்துக் குலுங்கும்
குடும்ப வாழ்வும் குலைந்து அழியுமே
இன்பந் தேடும் இழிகுலத் தோரே
அன்பான மனைவி அருகிலி ருக்கத்
தாசியர் நாடித் தாவி ஓடி
மேக நோயை மேலெங்கும் பெற்று
சாவை நாடி சரணடைகின் றீரே.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்