ஏமக்குறை
நோய் AIDS - (குறள் வெண்பா)
கவிஞர்
இனியன்
பலவகை
நோய்கள் தொகுப்பென மாறி
உடலை அழிக்கும் உணர்.
ஏமக் குறைநோய்க் கிரையாகிச் சாதற்குக்
காமத் தொடர்பைக் கருது..
ஆய்வு செயப்பட்(ட) அருங்குருதி ஏற்றார்க்கு
மாய்தல் இலஏப்பி னால்.
ஒருவர் பயன்படுத்தும் ஊசியை மற்றோர்
ஒருவுதல் ஒன்றே ஒழுங்கு.
எள்ளிடும் ஏமக் குறைநோய் உடையவர்
பிள்ளைப் பெறாஅமை நன்று.
ஏமக் குறைநோய் எளிதில் பெறக்கூடும்
காம உறவைக் களை.
மணத்தல் நிகழ்வு நிறைவுறா முன்னர்
புணர்தல் தவறே உணர்.
கணவன் மனைவி கருதிடின் கற்பைக்
கனவிலும் இல்லையாம் ஏப்பு
கொல்லுமோர் ஏமக் குறைநோய ராயினும்
ஒல்லும் வகையெல்லாம் ஓம்பு.
முப்பாலை ஏற்று முழுதாகக் கற்றார்க்கு
எப்போதும் ஏப்பிலை காண்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்