அலைவீரன்
பெருமாங்குப்பம், சா.சம்பத்து
அலை
அடக்கி
வலை விரிக்கும்
அரிதான தமிழ்வீரன்
அலையோடு அலையாகத்
திரும்பாமல் போனானே...!
கரைமீது நின்றேங்கிக்
கரம் தொடுவான் கணவனென
காத்திருந்த தமிழ்ப்பெண்ணோ
கைம்பெண் போல் ஆனாளே...!
சோறின்றி நீரின்றித்
திரும்பாத உறவுக்காய்
தவம் கிடக்கும் தமிழ் உறவின்
தவிப்பைத் தான் யார் உணர்ந்தார்...?
நிலம் தழுவும்
நீரைப் போல்-பிரியாமல்
கடல் தழுவும் காவலனைக்
காக்காமல் விட்டோமே...!
துல்லியமாய்
அலை நகர்வை
அளக்கின்ற கருவி கண்டும்
அலைவீரன் உயிர்த் துடிப்பை
அளக்காத மர்மம் என்ன...?
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்