மகிழ்வளிப்பாய் புத்தாண்டே

பாவலர் கருமலைத்தமிழாழன்



னிதநேயம் பெருக்கெடுக்க
       மனத்திலன்பே உருவெடுக்க
இனியவாழ்வைக் கன்னலென
       இங்களிப்பாய் புத்தாண்டே !

சாதிகளின் அணிவகுப்பும்
       சண்டைகளின் பிணக்குவிப்பும்
வீதிகளில் ஒழிந்ததென
       விளம்பிடுவாய் புத்தாண்டே !

நதிகளினை இணையவைத்து
       நாடெல்லாம் செழிக்கவைத்து
புதியவொளி இன்பத்தில்
       பூத்திடுவாய் புத்தாண்டே !

வளமையெனும் விதைதூவி
       வறுமையெனும் களைபிடிங்கி
நலங்களினை வளரவைத்து
       நகைசெய்வாய் புத்தாண்டே !

தமிழர்க்குத் தமிழூட்டி
       தமிழுணர்வை நெஞ்சூட்டித்
தமிழையெங்கும் நிலைநாட்டி
      தகதகப்பாய் புத்தாண்டே !

செங்கரும்பின் சுவைபொழிந்து
       சேந்நெல்லின் மணிகுவித்து
மங்கலத்தை மனைநிறைத்து
       மகிழ்வளிப்பாய் புத்தாண்டே !
 



 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்