நமக்கில்லை ஞாயிற்றுக்கிழமை
கவிஞர் புதுவைத்
தமிழ்நெஞ்சன்
காலம்
என்பதில் காலடிச் சுவட்டை
கவன மாக
பதித்திடுவாய் - இந்த
ஞாலம் போற்ற ஞாயிற்றுக் கிழமையும்
ஞாயிறு போல
ஒளியிடுவாய்
வாழ்வில் இன்பம் வந்து குவிந்திட
வியர்வை சிந்தி
உழைத்திடுவாய்- நீ
வீழ்ந்திடும் மழையாய் மாறியிங்கே
விதையின் உறக்கம்
களைத்திடுவாய்
எல்லா உயிரும் எமதின் உயிரே
என்றே எண்ணி
அணைத்திடுவாய்- நீ
வெல்லும் சொல்லை வேரெனச் சொல்லி
வெற்றி தன்னை
குவித்திடுவாய்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்