வைக

கவிஞர் ப.க.நடராசன்

ங்க இலக்கியங்கள் கொண்டாடிய
சங்கம் வளர்த்த மதுரையில்
சஞ்சலம் சிறிதும் இல்லாமல்
செழிப்புடன் ஓடிய வைகை ஆறு

சிறிதாவது கவனம்
செலுத்துங்கள் என்னில் எனும்
சிணுங்கலுடன்
சிலாகித்து நிற்கிறது...

மாக்கள் மதி இன்றி வைகையை
மாசுபடுத்தி வருவது கண்டு
மலராக மணம் வீசி வீறுநடை
போட்டவள் இன்று
மங்களம் இழந்து
மண்ணாக கசடாக கறைபடிந்து...

புண்ணியம் வழங்கியவள்
புதிராக காட்சி அளிக்கின்றாள்..

தான் பாய்ந்தோடும் இடம் அனைத்தும்
தாயன்போடு வளம் வாரி வழங்கியவள்
தவிப்புடன் தயங்கி நிற்கின்றாள்..

இயற்கை வைகையை மாற்றி அமைக்க மாரியாக பொழிந்ததாலும்
இரவு பகல் பாராது மாக்கள்
மாசு படுத்துகின்றனர்...

இந்நிலை மாற இக்கவியின்
வரிகள் வாஞ்சையுடன்
இறைஞ்சி யாசகம் கேட்டு நிற்கின்றது...



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்