உழவர்தனை வாழ்த்திடுவோம்

கவிஞர் குமுளன்



ழவர் நாங்கள் ஏர்கொண்டே பண்படுத்தி நிலமதனை
உரமிட்டே நெல்மணிகள் விதைத்திடுவோம் வயலினிலே
வரம்பு கட்டி நீர்பாய்ச்சி வளத்திடுவோம் பயிரதனை
வரை வரையாய் அரிவி வெட்டி சூடுவைப்போமே

கழத்தினிலே மாடுகட்டி மிரித்திடுவோம் நெற்கதிர்கள்
கழத்துமேட்டில் ஏறிநின்றே பொலியோ பொலியெனவே
கழத்தருகே பொலிக்கொடியை நயமாக நாமகற்றி
கழப்போரை நாடிநின்றார் நலமடைய வழங்கிடுவோமே

தைபிறந்தால் வழிபிறக்கும் விவசாயி வாழ்வினிலே
தைப்பூசத் தினத்தினிலே புதிரெடுத்தே வந்திடுவோம்
தைப்பொங்கல் பொங்கிடவே தந்திடுவோம் புத்தரிசி
தையலரும் சேர்ந்திங்கே கொண்டிடுவோம் புதுக்கோலம்

பொங்கலோ பொங்கல் பொங்கி மகிழ்ந்திடுவோம்
பொன்னான நிறத்தினிலே விழைந்த நெல்லெடுத்தே
பொன்போன்ற உமியை நீக்கி கரும்புச் சர்க்கரையும்
பொன்னான பயறுமிட்டு பாற்பொங்கல்பொங்கிடுவோம்

அதிகாலை எழுந்திடுவோம் அள்ளி நீரைப்பக்குவமாய்
அதிகமாகக் குளித்திடுவோம்அணிந்திடுவோம்புத்தாடை
அதிக கோலம் முற்றத்தில் போட்டிடுவோம் அழகாக
அதிகமாகப் பால் எடுத்தே அப்பாவும் வந்திடுவார்

வண்ணமலர் பறித்தே நாம் மாலை சூட்டி முற்றத்தே
வண்ணக் கோலம் மேலாக தோரணங்கள்கட்டிடுவோம்
வண்ணமாக வாழையிலை நாம் பறித்தே சூரியனை
வணங்கிநாமும் படைத்திடுவோம் பொங்கலினை

பாரினிலே புதுமையினைப் படைத்து நிற்பான்விவசாயி
ஊரினிலே பட்டினியை நீக்கிவைப்பான் உபகாரி
ஏரினிலே காலத்தைக்; கழித்திடுவான் கருமயோகி
காரினிலே காத்திடுவான் நெல்மணியை பெரும்போகி

நன்செய்யும் நிலமதனை நாடிநிற்பான் விவசாயி
நன்மைகளே செய்திடுவான் நாட்டுக்கோ நலமாக
நன்றெனவே ஊரினிலே பகுத்தளிப்பான்விளைபயிர்கள்
நன்றி கொண்டே படைத்திடுவான் புதுப் பொங்கல்

வாழ்க வாழ்க வாழ்க என்றே வாழ்த்திடுவோம்
வாழ்வழிக்கும் விவசாயி நீடூழி வாழ்ந்திடவே
வாயார வாழ்த்திடுவோம்; நலம்பெறவே விவசாயி
வானம் இரந்து என்றும் வாழ்ந்திடவே என்நாளும்

உழுதுண்டு வாழ்வதற்கோ ஒப்பேது உலகினிலே
பழுதுண்டோ அவர் பணிக்கோ உலகினிலே என்நாளும்
வழுவுண்டோ அவர் பணியில் நாம் காண எப்போதும்
தொழுதுண்டே போற்றிடுவோம் உழவர்பணி பாரினிலே!
 




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்