அகிம்சா மூர்த்தி அண்ணல் மகாத்மா காந்தி

கவிஞர் முருகேசு மயிலவாகனன்






ன்னையின் வாக்கை அருமருந்தாய்;க் கொண்டவனே
துன்பமது கண்டு துவளாதே – வன்பகையைச்
சாத்வீகக் கொள்கையால் சாதித்த காந்தியை
ஏத்தியே போற்றிடுவோம் ஈங்கு.

சட்டத் தரணியாய்ச் சாதிக்க எண்ணியவர்
பட்டதுன்பம் பற்பலவே பாதகரால் - விட்டாரா
இல்லையில்லை வேதனையை ஏற்றார் விரைந்துமே
சொல்லாற்றல் மிக்கதந்தச் சேய்.

தென்னா பிரிக்காவில் தேவியாம் வள்ளியம்மை
அன்னை அருகிருந்தே ஆற்றுபணி - இன்னதென்று
சொல்லற் கரியனவே சோதனைமேல் வேதனைகள்
எல்லாம் அவர்மனதுள் ஏற்று.

வெள்ளையரின் ஆட்சி அதிகாரம் வேகமுற
கள்ளமிலாக் காந்திக்குக் கண்ணீர்தான் - வெள்ளமென
வேதனையைத் தந்திடவே வேகமாய்த்தாய் நாடேகிச்
சாதனைகள் செய்தாரே தான்.

தன்னால் முடிந்தவற்றை தான்செய்து பார்த்துவிட்டு
உன்னால் முடியுமென்று ஓதுகின்ற – அன்னவரின்
பொய்யறியாப் போதனையைப் போற்றியே ஏற்றவர்க்கு
உய்யவழி தந்தவரின் ஓர்ப்பு.

காட்டாறு வெள்ளமாய்க் காந்திபின் மக்களின்
ஊட்டுசக்தி யாய்மிளிர்ந்த உத்தமனே – வாட்டமின்றி
வெங்கொடுமை ஆட்சியை வேரோ டழித்ததந்த
தங்கமனத் தாத்தாநீ தான்.

மதுவொழிப்பைக் கொண்டுவர மாற்றாரும் ஏற்றார்
அதுஇன் றிலதேனோ அங்கு – வெதும்புகின்ற
மக்களின் வேதனைக்கு மாற்றுவழி ஏதுமில்லை
தக்க தலைவரின்மை தான்.

உப்பள்ளி நாட்டை உலுக்கிய உத்தமனே
தப்பேதும் செய்தாலும் தண்டிப்பாய் - செப்பரிய
ஆய்வின்பின் அன்னவரைத் தேடியே தண்டிக்கும்
வாய்மை தவறாத மன்.

தென்னாட்டுச் சிங்கங்கள் சேர்ந்துகொண்டார் உன்னுடனே
தன்னாட்டை மீட்கத் தயக்கமின்றி - இன்னலுற்றார்
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் செய்பணிகள்
உக்கிரம் வாய்ந்தனவே தேர்.

சத்தியத்தை ஆயுதமாய்ச் சார்ந்;திருந்த நாடின்று
குத்துவெட்டு கொள்ளைகுடி கூடிடவே – புத்தியற்;றோர்
ஆட்சியங்கே புத்தூக்கம் கொண்டிடவே ஆற்றலின்றி
வாட்டமுறு மக்களது வாழ்வு.
 






 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்