உலகம் இன்று!
வினோத், வட்டக்கச்சி
இரண்டு
விழிகள் அசையும்
இடையே கனவுகள் நிறையும்
இருந்த மனமோ பதறும்
இப்படியே வாழ்க்கை நகரும்
வாழும் காலம் கொஞ்சம்
வாழ்க்கை நெறிகள் அதிகம்
உலகம் பணத்தில் மோகம்
உழைப்பவன் வறுமையின் பக்கம்
உணர்கிறேன் வாழ்வில் நாளும்
கோடிகள் வீணாக கரையும்
குழந்தைகள் பசியில் அழும்
கோயிலில் உயரும் கோபுரம்
ஏழைக்கு எப்போது ஏற்றம்
விண்ணில் ஆயும் விஞ்ஞானம்
மண்ணில் பசிபோக்க காணும்
விலங்குகள் மீது இரக்கம்
மனிதர்கள் மேல் யுத்தம்
போலிகள் காட்டும் புனிதம்
புரிய வேண்டும் மனிதம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்