காதலோ காதல்
புலவர்
முருகேசு மயில்வாகனன்
பருவத்தின்
உந்துதலே பாசமெனும் காதல்
அருவருப்புத் தந்தால் அதுவே – பெருநெருப்பாய்ச்
சாதிமத பேதத்தால் சாதனை செய்வதாய்
மோதி அழித்திடுமே மேல்
உள்ளத் துணர்வினது உந்துசக்தி காதலெனத்
தௌ;ளத் தெளிந்தறிந்தே தேர்ந்தபின் - மெள்ளத்
தொடர்தலே காதலாம் தேம்பாய்த் தடங்கல்
முடங்கலற்ற தேர்வு முறை.
இன்பமாம் வாழ்வு இயற்கையின் சேர்க்கையே
அன்பால் இணையும் இணையர்கள் - துன்பமின்றி
வாழத் துணையா யிருத்தலே காதலென
ஆழமாய்ச் சிந்திப்பீர் ஆம்.
உடம்பொ டுயிர்போல உள்ள உறவே
தடங்கலிலாக் காதலர் வாழ்வு – உடன்;கட்டை
ஏறினோர் உண்டக்கால் ஏற்றமுறு காதலன்று
மாறிவிட்டார் காதலர் இன்று.
பொய்சொல்லிக் காதலித்தால் பொன்னான வாழ்வுதான்
ஐயத்துக் குள்ளாகி ஆற்றலிழந்தே – தொய்வுறுமே
உண்மையே பேசி உரிமைக் குரல்கொடுத்தால்
எண்ணம்போல் வாழ்வென் றுணர்.
மாற்றமொன்;றே மாறாத வாழ்வியல் வாய்ப்பறிந்தே
ஊற்றெடுக்கும் காதலை உற்றுணர்ந்தே – போற்றுவதே
சாலச் சிறப்பென்றே ஏற்றதனைப் பற்றுடனே
சீலமாய்ச் செய்பெற்றோர் சீர்.
காதலெனும் சாகரத்தில் காலங் களிக்கின்;ற
சோதர சோதரிகாள் சோகத்தின் - வேதனையால்
வாடுகின்ற பெற்றோரின் வாழ்வியலைச் சிந்திப்பீர்
தேடுதலைச் சீராகத் தேடு
காதல் தினத்திலே காதலர்கள் கூடியே
சாதனை என்றெண்ணிச் சார்பற்ற – மோதல்கள்
சட்ட ஒழுங்கின்றிச் சல்லாபஞ் செய்கின்றீர்
திட்டமிலாக் காதலின் தீர்வு.
கூடிக் குடிக்கிறீர்கள் கோச மிடுகிறீர்கள்
வேடிக்கை காட்டி வெறுப்பூட்டி - ஆடியோடி
வீதியில் செல்வோரை வீம்புக் கிழுக்கிறீர்கள்
சாதிக்கும் காதலிதோ தான்.
காலத்தின் மாற்றத்தால் காதலுக்கு முன்னுரிமை
சீலந் தவறாதே சிந்தித்துச் - சாலச்
சிறந்தவற்றைச் சாதித்துச் சிந்தை தவறாதே
அறவழி வாழ்தல் சிறப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்