எங்கே செல்கிறது மனிதம்....
கவிஞர் சு.அட்சயா, கோவை
கனமான
சுமையாக எண்ணாமல்
சுகமான சுமையாக எண்ணி
நாம் விழிகள் திறக்க
தான் விழிகள் மூடாது
பத்து மாத பொக்கிசமாய் உங்களை
பத்திரமாய் பெற்றெடுத்த அன்னையை
பாதுகாக்க வழி இருந்தும்
பரிதவிக்க விட்டது ஏன்?
அறிவுரைகள் பல பகர்ந்து
அன்றாடம் அயராது உழைத்து
எதிர்காலத்தை எண்ணத்தில் கொண்டு
கற்பனை கனவில் மிதந்து....
உங்களின் ஏணிப் படியாய் இருந்து
வாழ்வில் ஏற்றம் தந்த தந்தையை....
வீட்டில் தங்ககூட இடமின்றி
தவிக்க விட்டது ஏன்? முதியோர் இல்லத்தில்....
திருமணம் செய்து வைத்த பெற்றோரை
மருமகளின் வருகைக்கு பின் மறந்தது ஏன்?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாம்
இத்தெய்வங்களை தவிக்கவிட்டு விட்டு
தேவாலயங்கள் சென்றென்ன பயன்?
ஆடம்பரங்கள் ஆயிரம் அடைந்தமைக்கு
ஆணிவேரே அவர்கள் தானே
அரை வயிற்று கஞ்சிக்கு அல்லாட விட்டது ஏன்?
தாயின் காலடியே சொர்க்கம் என்பதை மறந்து
சொத்து கணக்கில் சொர்க்கம் தேடுவது ஏன்?
இத்தனை தேடல்களையும் தொலைத்து
பேற்றோரை பேணுங்கள்.
மகாத்மாவாக மாறச்சொல்லவில்லை
உங்களை மனிதனாக மாறச்சொல்கிறேன்.
அன்னை தெரசாவாக மாறச்சொல்லவில்லை
இனியாவது அன்னைக்கு சோறிடச் சொல்கிறேன்...
மாறட்டும் இனியாவது இவ்வுலகம்
முதியோர் இல்லங்களை மூடட்டும் வருங்காலம்...
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்