கோவலர்வாய்
வைத்த குழல்
கவிஞர் அனலை.ஆ.இராசேந்திரம்
கூந்தல் கருமேகம் கண்கள்
மதன்அம்பு
மாந்தளிர்போல் மேனி மலர்முகத்தாள் - ஏந்திழை
கோவைத் திருவாயிற் கொஞ்சும் எழிற்றமிழோ
கோவலர்வாய் வைத்த குழல்
கன்னி விழியழகிற் கட்டுண்டேன் பொன்போலும்
கன்னக் குழியழகில் மூழ்கிற்றேன் - மன்னுதமிழ்ப்
பாவலர் பாடுபொரு ளானஅவள் வாய்மொழியோ
கோவலர்வாய் வைத்த குழல்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்