கவிதைகள்
அகில்
இலக்கிய
வானில்
வலம் வருகின்ற
தாரகைகள்
சிந்தனைச் சிற்பியின்
சொல்லோவியங்கள்
கற்பனைப் பூங்காவில்
தொடுக்கப்படும்
மாலைகள்
வார்த்தைகளின்
படையெடுப்புக்கள்
கவிஞர்களின் அன்புக்
குழந்தைகள்.
கவிதை தோன்றும் நேரம்
அழகான
பெண்களிடம்
அரட்டை அடிக்கும்போது
பஞ்சணையில் படுத்திருந்து
சிந்தனையில் மூழ்கும் போது
பச்சைப் புல்வெளிகளில்
தனிமையில் நடக்கும் போது
கோபத்தின் உச்சிக்கு
நான் செல்லும்போது
சோகத்தில் என்மனம்
துவள்கின்றபோது
அயராது உழைக்கின்ற – நல்
தொழிலாலர்களைப் பாக்கின்றபோது
இல்லையென்று சொல்லாது கொடுக்கின்ற
இதயங்களைப் பார்க்கின்றபோது
மக்கள் பணத்தை ஏப்பமிடும்
அரசியல்வாதிகளைப் பார்க்கின்றபோது
கொட்டும் மழை வரக்கண்டு ஆடும்;
மயில்களைப் பார்க்கின்றபோது
அசைந்து வரும் அருவியருகே
அமர்ந்திருக்கும்போது
துள்ளிவிளையாடும் குழந்தையைப்
பார்க்கின்றபோது
குஞ்சுக்கு உணவுட்டும் தாய்ப்பறவையைப்
பார்க்கின்றபோது
அட
கவிதைக்குள் கவிதையாக
நான் உறவாடும் போதெல்லாம்
கவிதை பிறக்கும்
எனக்கு.
உலக கவிதை தினம் மார்ச் 21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்