கடவுள் என்னும் கவிஞன்
கவிஞர் இனியன், கரூர்
விழியும்
மொழியும் விழித்திருந்தால்
வழியும் கவிதை வண்ணமயம்!
கழியும் ஒவ்வொரு கணப்பொழுதும்
பிழியும் கவிதைச் சாறாகும்!
தண்ணீர் இல்லா காவிரியும்
எண்ணிடின் நீண்ட பாவாகும்!
கண்ணில் பேசும் காரிகையின்
கண்ணீர்த் துளியும் கவியாகும்!
மூன்றாம் விழியால் பார்ப்பவனின்
சான்று சாற்றுக் கவியாகும்!
ஊன்று கோலாய் நின்றுதவும்
ஆன்றோர் கூற்றும் அருங்கவியாம்!
கவிஞன் யாரெனக் கேட்கின்றீர்
புவியில் படைப்புக் கடவுளவன்!
கடவுள் யாரெனக் கேட்கின்றீர்
திடமாய்ச் சொல்வேன் கவிஞனவன்!
உலக கவிதை தினம் மார்ச் 21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்