ஸ்டீபன் ஹாக்கிங்

பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார்



சைநிறை ஆய்வே இயற்பியலில் செய்தீர்
தசையிழு நோய்நீர் மடித்தீர் - நசையில்லா
அண்டம் இருந்தென்ன என்றீர், கருந்துளை
கண்டதன் ஓர்புரைத்தீர் காண்


இசை - புகழ்
ஓர்பு- ஆராய்வு, எண்ணுதல்
நசை - அன்பு

தசையிழு நோய் என்பது இங்கே:
"Amyotrophic lateral sclerosis (ALS),
also known as motor neurone disease (MND),
and Lou Gehrig's disease"





 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்