ஸ்டீபன் ஹாக்கிங்!
தேசபாரதி தீவகம்
வே.இராசலிங்கம்
எழுபத்தியாறு
வயதில் இறந்த
இந்த நூற்றாண்டின் இயற்பியலாளர்
நடப்புப் பிரபஞ்சத்தின்
பன்முகத்தன்மைக் கோட்பாட்டின்
நிரூபணத்திற்குப்
பெறுமானம் வைத்த பெருமான்!
மின்காந்தக் கோட்பாட்டினின்
கறுப்புத் துளையிலிருந்து வரும்
கதிர்வீச்சுக் கணிதம்
துருவத்திற்கு அருகில்
தானாக உருவாக்கப்பட்ட ஒரு
துகளாகத் திகழும் என்பது
ஹேக்கிங் வாதமாக
மறைவுக்கு முன்னிரு வாரங்களில்
முத்திரை இட்டவர்!
மாணிக்கவாசகர் அறிவித்த
பிரபஞ்சப் பொறிகளில் இருந்து
ஹேக்கிங் வரைந்த பொற்கிரணங்கள்
ஒத்துப் போகின்றiமையை,
கலாநிதி இலம்போதரன் எடுத்துரைத்த
சைவ சித்தாங்களினால், ஸ்டீபன் ஹேக்கிங்
தனது எழுபத்தியாறு வயதில் இந்தப்
பிரபஞ்சத்தை இழந்தபொழுது
எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு
அழிந்துவிடப் போவதில்லை
எங்கள் பிரபஞ்சம்போல் பிறிது
பிரபஞ்சங்களின் இருப்பிடங்களைக் கணிக்கப்
போதுமான கதிர்வீச்சுத் துளைகளை
ஸ்டீபன் காட்டிக் கொடுத்துள்ளமை
இந்தக் காலக் குறிப்பேட்டின்
கனபரிமாணம்...
எண்ணற்ற பதவிகள்...
எண்ணற்ற பட்டங்கள்...
விஞ்ஞானப் பேராசான்..
மெய்ஞ்ஞானக் கோட்பாட்டின்
விரிசல்களை எடுத்துரைத்த
மேதாவி...!
வானமே எல்லையென்று நம்நாடு ஏடு
எழுதிவிட்ட ஒரு மகத்துவனின்
ஏலாப் பொழுதிலும்
திருமணம், பிள்ளைகள் என்று
தோப்போடு சரிதம் வைத்த
இந்தப் பிரபஞ்சத்தின் இன்றைய மேதை
நாளைய பொழுதிலும் வாழ்வான்!
சாதனையாளன் பிறப்பதில்லை...
அவன்
இறைவனால் அருளப்படுபவன்..
அவன்தான் ஸ்டீபன் ஹேக்கிங்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்