உடலும் உள்ளமும்

கவிஞர் சா.சம்பத்து, பெருமாங்குப்பம்



யர்ந்த
இலக்குக்க - உடல்
ஒத்துழைக்க மறுத்ததை-உன்
உள்ளம் ஏற்றதால்
உனக்கு முன்
பள்ளமும் கோபுரமாய்...!

உன்
அண்டம் பற்றிய
அறிவாற்றல்
உருவ ஆற்றலையே
வெற்றி கொண்டது...!

உடல்
இயங்கா நிலைபெற்றும்-நீ
என்றும் இயங்கும்
புவிக் கோளுக்கு
இயக்க சூத்திரம் கண்டாய்...!

அநியாய கொள்ளைகள்-பலரது
வாழ்வை அலங்கரிப்பதுபோல்
தோன்றி
அனைத்தையும் அழிக்கும்...!
உன்
விஞ்ஞானக் கொள்கைகளோ-
உன் புகழை இவ்வுலகில்
என்றென்றும் நிலை நிறுத்தும்...!

 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்