நிச்சயமாக உனதென்றே சொல்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

உன் வரண்ட தொண்டைக்குழிக்கு
தண்ணீரை
எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்

இரையும்
வயிற்றுக்கென நீ
உள்ளே
தள்ளிடும்
எல்லாவற்றையும்
சுவைத்துப்பார்க்கிறது
எதையும்
தனக்கென வைத்துக்கொள்ளாமல்
தானும்
உபயோகித்துக்கொண்டு
முழுதாக
உனக்கே தருவதென்பது
ஆச்சரியம்
தானென்ன

எல்லோரையும் தூற்றியபடியும்
எச்சிலில்
குளித்தபடியும்
தினமொரு
ஆளைத்தேடி
உன்
கண்களால் செவிகளால் வார்த்தைகளால்
அலையுமது
ரோசா
வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும்
திமிர்பிடித்துக்
கொழுத்துப்
போய்க்கிடக்கிறது
அதற்கு
மெல்லவென நான் சிக்கியபொழுதில்
மேலண்ணத்துக்கும்
கீழண்ணத்துக்குமிடையிலதனைத்
துடிதுடிக்கவைத்து

கட்டற்ற
பொய்களை
அவதூறுகளை
வசைமொழிகளை
வெளியெங்கும்
இறைத்தது
தேளுக்கில்லை
அரவத்துடையது
மிகவும்
மெல்லியது
, பிளந்தது, கூரியது
இரண்டெனவும்
கூறலாமெனினும்
அதனைப்
போன்றதல்ல

உன்னுடையது
தீண்டப்பட்ட
எல்லா மனங்களையும்
கொல்லும்

கொடிய
விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும்
தொடரும்.

 

mrishanshareef@gmail.com