விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்



பார்புகழ் இங்கிலாந்து ஒக்ஸ்போட்டில் பிறந்தாரே
       பூமியில் இணையில்லா பிரபஞ்ச பேராசான்
சீர்மிகு அமெரிக்காவின் உயர்தரக்கு டிமகனான
       சிறந்த விருதினைப் பெற்றிட்ட விஞ்ஞானி
நேர்மையாய் இங்கிலாந்து அமெரிக்காவை அன்புடனே
       நாசம் செய்கின்ற அணுக்குண்டை அழியென்றார்
கூராய் உன்னுடைய கண்டுபிடிப்பு பறைசாற்றும்
       கலங்கரை விளக்காய் அணையாது திகழ்கிறதே
ஆராய் அமுதமுமாய் உனதுபுகழ் வானுயர்ந்து
       அவனியில் ஸ்டீபன் ஹாக்கிங்காய் வாழ்வாயே






 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்