ஸ்டீபன் ஹாக்கிங்

கவிஞர் குமுளன்



றிவின் சிகரம் அலையின் தெப்பம்
அறிவியல் தந்த தன்னிகரில்லா ஸ்ரிபன்
அறிவியல் மேதகை என்றுணுர ஏற்புறு
அறிவியல் தடம் பதித்தார்

வல்லோன் என்றே போற்றிடவே வரலாற்றில்
வல்லபணிகள் அக்கியிங்க வகையாய்த் தந்த
நல்லோனை நாளும் நலமாய்ப் போற்றிடும்
நல்லவை தந்தஸ்ரிபன் கார்க்கிங்கே

எத்தனை அற்புதம் எவ்விதம் தந்தார்
அத்தனை அறிவியல் அறிஞர் போற்றும்
தத்துவ முத்துக்கள் என்றுணர தந்தார்
தத்துவ அறிவியல் வானமதாய்

ஐயன்ரீன் வழியில் ஐக்கியமாய் சிந்தனை
ஐயம்கொண்ட வினாக்களையே கேட்டே
மையம் கொண்டார் மனவெளியில் விடைகள்
தையலாக தொடர்ந்தார் இயப்பியலை

அறிவுப் பசிக்கு அணைத்துத் தீனியிட்டார்
அறியா உடலின் அடிப்படையில் நோயில்
குறிப்பாய் குதறிட குற்றுடம்பாய் போராடி
குறித்த வானியல் பெருகத்தந்தார் தத்துவமே

கருந்துளை ஈர்ப்புடனே கதிர்வீச்சைத் தருவதும்
கருத்தில் அறிந்தார் கருமமதாய் வியந்தே
கருதத்தத் துவமாய்நிறு விவைத்தார் கார்க்கிங்
கருப்பொருளில் அவர் நாமம் நிலைத்திடுமே



 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்