பூக்காமற்
போகுமோ பூ
கவிஞர்
சபா.அருள்சுப்பிரமணியம்
பூக்குமென
நாம்தேடும் போரில்லா வாழ்வின்னும்
காக்கவைத்துக் காலம் கடத்துவதேன்? – ஏக்கமுடன்
தூக்கம் தவிர்த்துத் துயரோடு பார்த்திருக்கப்
பூக்காமற் போகுமோ பூ
கேட்கும் அமைதிப்பூ கிட்டாதோ என்றேங்கி
நாட்கள் நகர்ந்திடவே நாமெல்லாம் - வாட்டமுடன்
ஆக்கம் தனைநாடி ஆவலுடன் காத்திருக்கப்
பூக்காமற் போகுமோ பூ
ஒன்றாய்த் தமிழ்த்தலைமை ஓரணியில் நின்றிடுமா?
இன்றதுதான் எங்கள் எதிர்பார்ப்பு! – நன்றாக
பூக்குமென நம்பும் புதுவாழ்வு ஈழத்தில்
பூக்காமற் போகுமோ பூ
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்