பூக்காமற் போகுமோ! பூ

கவிஞர் ஆ.இராசேந்திரம்



பொன்னைப் புதுமலரைப் பொங்கும் எழில்நிலவை
மின்னை அழகின் முழுஉருவை – சின்னளென
நோக்கிக் கழியாதே பின்நினைந்து நோவுறுவை
பூக்காமற் போகுமோ! பூ

வானம் பெருவீதி நாளும் வலம்வந்து
மீனுறங்கும் ஆழிக்கண் போம்பரிதி – நானிலத்தைக்
காக்கக் கதிரெறிந்து வாரானோ? தேமொழியே
பூக்காமற் போகுமோ! பூ

ஆடா தொழியுமோ அழகுமயில்? பூங்குயில்கள்
பாடா தொழிவவோ பார்மீது? – பீடாகத்
தூக்கி நறுமணத்தைத் தென்றல் அசையாதோ?
பூக்காமற் போகுமோ! பூ




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்