பூக்காமற் போகுமோ பூ!

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்



போர்க்கால மேகங்களே புன்னகையை ஏன்கெடுத்தீர்
நாற்காலி மேல்வைத்த நட்பதுவா - நாற்புறமும்
ஏற்காதிங் கெம்மவரை ஏனழித்தீர்?! எம்கொடியில்
பூக்காமற் போகுமோ பூ!

ஏர்பூட்டி நீர்பாய்ச்சும் ஏழைவிவசாயி பட்டினியேன்
சீர்சீமான் வீட்டினிலே சிந்துதேநெல் - பார்மகளே
போர்க்காலத் தாக்கத்தால் பூமியிலே பொன்நொச்சி
பூக்காமற் போகுமோ பூ!
 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்