பூக்காமற் போகுமோ பூ

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

ழுக்கம் மனிதருக்கு ஓங்கி யிருந்தால்
அழுக்காறு ஆசைகள் அண்டா - இழுக்கத்தில்
பக்குவமாய் ஈர்ந்து பதவிகள் பெற்றிட்டால்
பூக்காமற் போகுமோ பூ

கற்பிக்கும் கல்வியைக் கண்ணாய் கருதியே
மன்னல் மலரான மாணவர்க்கு - நன்றாக
ஆக்கமுடன் கற்பிக்கா ஆசிரியர் செய்கையினால்
பூக்காமற் போகுமோ பூ

வாக்கும் செயலும் வசப்பட்டு ஒன்றுபட்டு
காக்கும் கடவுளைக் கண்ணினால் - நோக்கியே
ஊக்கமாய் மனமும் உடலும்ஒன் றாதுவிடின்
பூக்காமற் போகுமோ பூ

சமாதானம் பேணுகின்ற சர்வதேச மன்றம்
அமைதியைக் காத்து அறத்தினைத் - தமதாக்கி
ஊக்கமுடன் மக்கள் உரிமையளிக் காவிடில்
பூக்காமற் போகுமோ பூ


மன்னல் - விடாமுயற்சி





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்