சித்திரைப் பெண்ணே வருக

கவிஞர் இனியன், கரூர்



சித்திரைப் பெண்ணே வருகஎன
சிந்தை மகிழ வரவேற்போம்!
முத்திரை பதிக்கும் ஆண்டாக
முழுதும் விளங்கச் செய்திடுவாள்!
இத்தரை வாழ்வார் எல்லோரும்
இன்புற்று வாழச் செய்திடுவாள்!
சத்தியம் நேர்மை தவறாமல்
சகத்தார் வாழச் செய்திடுவாள்!
துப்பாக்கி எல்லாம் துருப்பிடித்துத்
தூக்கி எறியச் செய்திடுவாள்!
எப்போதும் உலகில் அமைதிப்புறா
எழிலாய்ப் பறக்கச் செய்திடுவாள்!
முப்பால் காட்டும் வழியினிலே
முனைப்பாய் இயங்கச் செய்திடுவாள்!
துப்பார்க்குத் துப்பாகும் தூயமழை
தப்பாது பெய்திடச் செய்திடுவாள்!


 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்