சித்ததிரை வந்தாள்
புலவர் முருகேசு மயில்வாகனன்
சித்திரை
மாதத்தில் சிரிக்கின்றாள் இயற்கையன்னை
எத்திக்கு பார்த்தாலும் எழில்கொஞ்சும் காட்சிகளே
புத்திக்கு விருந்தாகப் பூரிப்பைத் தந்திடுமே
இத்தனையும் தருகின்ற ஈசனைநாம் வணங்குவமே.
சோம்பியநல் மரங்களெல்லாம் சோர்வின்றித் துளிர்த்தனவே
ஆம்பலுடன் மற்றுமுள அறபுதமாம் மலர்களெல்லாம்
பூம்பொழிலாய்ப் பூத்துகுலுங்கிப் புதுப்பொலிவு பெறுவதுவும்
கூம்பியிருந்த குயில்களெல்லாம் குக்கூவெனக் கூவிடுமே.
சுற்றுலா நகரங்கள் சுறுசுறுப்பாய்த் தானியங்கும்
கற்றுணர்ந்த பெரியோர்கள் கருணைமிகு தாபனங்கள்
நற்சேவை யென்றெண்ணி நாடுசுற்றிக் காட்டுதற்காய்
பற்றுடளே மாணவர்க்காம் பங்களிப்பும் செய்வாரே.
சினமில்லா வசந்தத்;தின் சீரான காலத்தே
தினமொரு விழாவாமே திரும்புமிட மெங்குமேதான
கனமான பணத்தையே காட்டிநிற்பர் வர்த்தகரே
மனமாக மக்களுமே மருகியே மயங்கிடுவர்
ஊர்ச்சஙகம் வானொலிகள் ஒன்றுகூடல் நடத்துதற்காய்
சார்புள்;;ள தலைவர்கள் சத்துணவுக் கூடங்கள்
போர்க்கால நிகழ்வுகளைப் புகைப்படங்க ளாக்கியே
பார்ப்போரின் கவனத்தைப் பக்குவமாய் ஈர்ப்பாரே.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்