காவேரி வீடுவரும் காண்
புலவர் முருகேசு மயில்வாகனன்
போராட்டம்
தந்திடுமே போதிய வெற்றிகளைச்
சீராகத் திட்டமிட்டே செய்திட்டால் - ஊராரைக்
கூவீ அழைத்தே குந்தகந்தான் செய்திட்டால்
காவேரி வீடுவரும் காண்.
மக்கள் புரட்சியே மாநில வெற்றிக்குத்;
தக்க பரிகாரம் தப்பினால் - சிக்கலே
சாவேதான் வந்தும் சளைக்காரே எம்மிளைஞர்;
காவேரி வீடுவரும் காண்.
கூவி அழைக்கின்றார் கூர்புத்த உள்ளவர்கள்
தாவிவரும் வாலிபரைத் தக்கவழி – பாவித்தால்
மாவீதி மக்கள் மறித்தெதிர் ஆர்ப்பரிக்க
காவேரி வீடுவரும் காண்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்