காவிரி வீடுவரும் காண்

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்



பூவிரித்தே ஓடிவரும் புண்ணிய நந்நதியே
பாவிகளின் கண்ணீரைப் பாராயோ - காவிரியே
தாவியெளும் தம்பியரும் தங்கையரும் கூடியௌ
காவிரி வீடுவரும் காண்!

தண்ணீரைக் கட்டிவைத்துத் தாழ்போட்டு சூழ்ச்சிசெய்தே
மண்ணாள எத்தனிக்கும் மந்தமதி - பெண்ணர்காள்
கூவி அழுதே குரட்டைவிட்டுத் தூங்கமாட்டார்;
காவிரி வீடுவரும் காண்

பட்டினி போட்டிங்கு பாமரரை பாழ்படுத்தத்
திட்டமிட்டுச் செய்கின்றீர் தீமைகளை - எட்டநின்று
ஏவிவிட்டு சூழ்ச்சிகள் எத்தனை செய்தாலும்
காவிரி வீடுவரும் காண்!



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்