பாரதிதாசன் பண்பு
கவிஞர் அச்சுவேலியூர்
கு.கணேசன்
நேரிசை வெண்பா
பாரதி
மேலுள்ள பற்றதனால் சுப்புரத்னம்
பாரதி தாசனெனும் பேரதனை—ஆரமதாய்
சூடியே! சுந்தரச் செந்தமிழ் பாபுனைந்தே
கூடி மகிழ்ந்தார் களித்து
கொள்கையின் குன்றாய்க் கருணைத் தியாகசிந்தை
வெள்ளை மனமுடையார் வேதனையைத் - தள்ளிவைத்து
பெண்மையைப் போற்றிய பைந்தமிழ் பாவலன்
கண்ணியம் மிக்ககவி காண்
பெண்மையைப் சீண்டிய பித்தரைச் சாடியே
பெண்ணின வாதிகளை பேய்களாய் - எண்ணியவர்
பாலர் திருமணத்தைப் பாதகம் என்றுரைத்தே
மூலவராய் நின்றெதிர்த்த முத்து!
கல்வியில் வல்லவராய் காலலொம் பாவலராய்
எல்லோரும் வாழ எழிற்கவிகள் - பல்பொருட்
கட்டுரைகள் காதைகள் கற்பனைச் சொல்லோவியம்
தொட்டுப் புனைந்தார் துணிந்து!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்