செல்வத்தில் சிறந்த செல்வம்

கவிஞர் இனியன், கரூர்



லகில் உள்ள நூல்களிலே
உயர்ந்து விளங்கும் நூலெதுவோ?
வான்புகழ் வள்ளுவர் வழங்கியது
வண்டமிழ் திருக்குறள் நூலாகும்

பாரினில் உள்ள நாடுகளில்
பழம்பெரு நாடு எதுவாகும்?
உயிரினும் மேலாய் நேசிக்கும்
உறுபுகழ் இந்தியத் திருநாடே!

தரணியில் உள்ள மொழிகளுக்குத்
தாயாய் விளங்கும் மொழியெதுவோ?
தன்னிகர் இல்லாத் தமிழ்மொழியே
தாயாய் விளங்கும் மொழியாகும்.

கோவில் பற்பல இருந்தாலும்
யாவினும் சிறந்த கோவிலெது?
தாயினும் சிறந்த கோவிலென
தரணியில் எங்கும் இல்லையப்பா!

பல்வகை செல்வம் இருந்தாலும்
பலரும் போற்றும் செல்வமெது?
செல்வத்தில் சிறந்த செல்வமது
கல்விச் செல்வம் ஒன்றேதான்!

எண்ணிடின் பண்புகள் பலவாகும்
எவரும் விரும்பும் பண்பெதுவோ?
மண்ணில் வாழும் முதியவரை
மதித்துப் போற்றும் பண்பாகும்!


 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்