எழுந்து வா...!
கவிஞர் சா.சம்பத்து,
பெருமாங்குப்பம்
இனஅழிப்புப்
போராட்டம் முடிந்த பின்பும்
இனவெறியர் ஓயவில்லை..! எஞ்சி வாடும்
இனத்தமிழர் சிறுவர்தம் பள்ளி செல்லும்
இடத்தருகே வாங்கியுண்ணும் பொருளில் எல்லாம்
மனநலமும் உடல்நலமும் அழிக்கும் நஞ்சு
மிகுந்துள்ளப் பண்டங்கள் விற்கின் றாராம்...
இனவேந்தே! பாவேந்தே! எழுந்து வந்தே
இனமழிப்போர் வேரறுக்கப் பாடல் செய்க!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்