உலகத் தொழிலாளர் தினம்
கவிஞர் அச்சுவேலியூர்
கு.கணேசன்
நிலவும்
எங்கள் வறுமை நீங்க நிஞாயம் கோருவோம்
கலகம் இல்லா உலகம் காண ஒன்று சேருவோம்
உலகத் தொழிலாளர் நிலையோங்க உருமை கோருவோம்
மலரும் பொழுது மகிழப் புலரும் என்றே பாடுவோம்
குத்தகை அடிமையாய் இத்தனை காலமும் கெட்டது போதுமடா
சத்துண வின்றி சாலையில் ஆலையில் செத்தது போதுமடா
சுத்தமு மின்றிசிச் சுதந்திரம் இன்றிப் சொற்பன வாழ்க்கையடா
கத்தியும் குளறியும் கேட்கவில்லை கடவுளும் எம்மைப்
பாற்கவில்லை
உளைத்து உளைத்து ஓடானார். அவர்உருமை யற்று மாடானார்
இழைத்தபோதும் ஊதியம் இலை மழைக்கு ஒதுங்க இடமுமில்லை
அளைத்தார் ஆதிக்க வாதிகளை! ஆரம்ப மானது பேச்சுவார்த்தை
முளைத்தது முறுகல் நிலையங்கே மும்முர மானது போராட்டம்
முதலாளி; தொழிலாளி முறுகல் நிலமை மிதமாக ஓங்கியது
இதமான பேச்சுப் பதமான பேச்சு இடர்பாட்டை நீக்கியது
முதுமைக்கு ஓய்வு முறைப்படி லீவ மக்களின் கல்விக்குதவி
முதலாளி தொழிலாளி ஒன்றாய் இணைந்த தொழிலாளர் தினமிதுவே!
அணையாத பாசமும் அதிகார வாதமும் ஒன்றான தினமிது
துணையாக நின்று துயரத்தை வென்ற தொழிலாளர் தினமிது
பிணையேது மின்றியே பொருள்பெற்று வாழும் மகிழ்வான தினமிது
இணையேது மில்லாத இதயங்கள் ஒன்றான தொழிலாளர் தினமிதே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்