மேதினம்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

தொழிலாளர் எட்டுமணி வேலைகோரி; க்கையைவேண்டி
       திரண்டு எழுந்து இரத்தம் சிந்தியநாள்
பழிகொண்ட முதலாளி பாட்டாளி வர்க்கத்தை
       பந்தாய் நினைத்து உயிரும் எடுத்தநாள்
அழிந்தவர்கள் தொழிலாள வர்க்கத்தோர் ஆனாலும்
       அவர்க்கு நீதியும் கிடைத்த புனிதநாளே
விழித்திருந்து ஆண்டு தோறும் தப்பாது
       விண்தொட்டுக் கொண்டாடி மகிழ்வுறும் மேதினமே

வந்ததில் மகிழ்ச்சி அடையட்டும் தொழிலாளர்
       வயது குறைந்த குழந்தைகள் இந்தியாவில்
சொந்தம் விட்டு கொத்தடிமை வேலைசெய்து
       சுதந்திர மில்லாது வாழ்வது தெரியாதா
எந்தன் உறவுகளே ஊக்கமாய் கவனித்து
       எந்தன் பிள்ளைகளை எப்ப மீட்கநீங்கள்
அக்கினி போலவே ஆவலாய் சென்றுநீவீர்
      அன்புடன் மீட்கும் பொன்நாள் மேதினமே





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்